Wednesday, September 23, 2015

கந்தரகோலம் கதைகள் - 01

பழனிச்சாமிக்கு கோமதியைப் பிடிக்கும். பிடிக்கும்னா நீங்க நினைக்கிற மாதிரி லவ் பண்ணுறதோ டாவடிக்கிறதோ இல்லை.
(ஸ்ருதி/நாசோ: இது கவிதையா? கவிதைல என்டர் பட்டன் தட்டியாகனுமே. எதுக்கும் இன்னும் கொஞ்சம் போகட்டும்)
எங்கள் காதல் ஜன்ம ஜென்மங்களாய் தொடரும் பந்தம், ரோமியோ ஜூலியட் போல, லைலா மஜ்னு போல என்பான். டீக்கடை பெஞ்சில் கூட உட்கார்ந்து டீ குடிக்கும் தருமனுக்கு காமெடியாய் தெரியும். ஒரு டம்ளர் டீயுக்கும் அரை சிகரெட்டுக்குமாய் இதையெல்லாம் கேட்க வேண்டிய தலையெழுத்து அவனுக்கு.
(ஸ்ருதி/நாசோ: இது சிறுகதை தான். இல்லை குறுங்கதை. அட எதுவா இருந்தா என்ன? ரெண்டு பேரும் வெட்டி பசங்க தானே? எது ரெண்டு பேரா? இந்த கதையை(?)ப் படிக்கிறவங்க 5000 friends, 3000+ followers, தெரியும்ல.)
கோபிசெட்டிபாளையம் பஸ் ஸ்டேண்டில் இருந்து தெற்காக செல்லும் தாராபுரம் மெயின் ரோட்டில் பதினைந்து கிலோமீட்டர்க்கு அப்பால் கொஞ்சம் கிழக்காய் செல்லும் பாதையில் அமைந்திருந்தது அவளுடைய வீடு, தோட்டம் மற்றும் நான்கு எருமைகளும் ஒரு பட்டி ஆடும் ரெண்டு கொடாப்பு கோழிகளும்.
(ஸ்ருதி/நாசோ: இவ்ளோ பெரிய ஸ்டேட்மென்ட்ட்டா? இப்படி எழுதுறது தான் இலக்கியமாம். இது கூடவா தெரியாது?)
கதைப்படி அவள் (நாசோ:அவள்னா கோமதி தான், ஸ்ருதி இல்லை) கல்லூரி முடிந்ததும் (நாசோ: கதைன்னா நாயகி கல்லூரிக்குப் போகணும், கவிதைன்னா ஸ்கூலுக்குப் போகணும்) தினமும் நாலாம் நம்பர் பஸ்ஸில் தான் சாயங்காலம் வீட்டுக்கு செல்வாள்.
நம்ம ஹீரோ கொண்டு, வாழ்ந்து வளர்ந்து அழிந்து திரும்ப வளர்வது எல்லாம் திங்களூர். திங்களூர் என்பது கோமதி வீட்டில் இருந்து நேர் கிழக்கே எட்டு கிமீக்கு அப்புறமாய் இருக்கும் ஒரு டவுன் பஞ்சாயத்து. அங்கிருந்து எப்படி கோமதி தெரியும்னு கேட்கறீங்களா? அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக்..

ரெண்டு மாசத்திற்கு முன்னாடி தான் தைப் பூசத் தேர் திருவிழாவில் ரெண்டு பேரும் மீட் பண்ணிட்டாங்க. மீட் பண்ணிட்டாங்கன்னு சொல்ல முடியாது. அவ அவனை முறைச்சா இவன் சிரிச்சான். பின்னாடியே வந்த கலாச்சாரக் காவலர் நாசோ & வாசகர் படை அவனைத் தனியாக்கூட்டிட்டு போயி நல்லா கவனிச்சு அனுப்பினாங்க. அப்போ அந்தப் படையில் இருந்த ஒரு பவுன்சர், "இனிமே உன்னை இந்தப் பக்கம் பார்த்தோம், கை காலை ஒடைச்சி ஈவ் டீசிங்னு உள்ளே போட்டிடுவோம்"னு போலிஸ் மாதிரியே பேசினான். 

(நாசோ: அடேய் அவர் நிஜமாலுமே போலிஸ் இன்ஸ்பெக்டர் தான், தேர்த் திருவிழாவை முன்னிட்டு வாசகர் வட்ட சந்திப்பு நடந்தது, அதில் கலந்துகொள்ள திருநெல்வேலியில் இருந்து என்கவுன்டரை நிறுத்தி வச்சிட்டு வந்திருந்தார்). 

இந்த மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன் ரேஞ்சுல அவங்களை டீல் பண்ணிட்டு அங்கிருந்து எஸ்ஸாகிட்டான். கட்டினா அவளைக் கட்டனும், இல்லைன்னா கல்லை வச்சிக் கொட்டிக்கனும்னு மப்பில் தருமன் கிட்டே சவால் விட்டான். சவால் விட்டதோட சரி, அதற்கப்புறம் அதை மறந்தும் போனான். போன வாரம் தருமனின் சொந்தக்காரன் காசுல இவங்க எல்லாம் தண்ணி அடிக்கும் போது தருமன், "மாப்ள, எப்போடா கல்லை வச்சி கொட்டிக்கப் போறே"ன்னு கேட்டு பகபகன்னு சிரிச்சான். கோபம் சுர்ருன்னு ஏறினாலும் சரக்கை முழுசாக் குடிச்சிட்டு, "அவளை எண்ணி இன்னும் ரெண்டு மாசத்தில் கரெக்ட் பண்ணிக் காட்டுறேன் பாருடா"ன்னு மனசுக்குள் கறுவினான். 

(நாசோ/ஸ்ருதி: எப்பப் பாரு சரக்கே தானா, சரக்கே இல்லாத கதை எதுவுமே இல்லையா? சரக்கு வராத கதைன்னு ஒன்னும் இல்ல, அட அவ்ளோ ஏன் வெண்முரசுல கூட ஆசான் சரக்கைப் பத்தி எழுதி இருப்பாரு.)

பிளாஷ்பேக் முடிந்தது...

காலேஜ் படிக்கிற புள்ளை, நம்மள மாதிரி வீஓக்கு எல்லாம் எப்படி கரெக்டாகும், அதை உடு மாப்ளே, இனி மப்புல கல்லை வச்சிக் கொட்ட சொல்ல மாட்டேன்னு தருமன் சமாதானம் சொன்னாலும் கோமதியின் அழகு அவனை என்னென்னவோ செய்தது. தூக்கம் வருகிறது ஆனால் தூங்கப் பிடிக்கவில்லை, பசிக்கிறது ஆனால் சாப்பிடப் பிடிக்கவில்லை, வயிற்றுக்குள் எதுவோ மேலே மேலே ஜிவ்வுன்னு பறப்பது போல ஒரு ரம்மியமான உணர்வு இப்படி கவிதை எழுத ஆரம்பித்தான். டெய்லி இவன் வருவதை அவள் கவனித்த மாதிரியே தெரியவில்லை. அவள் ஏன் கவனிக்கணும்? அவ போன்ல அவளோட காதலனை வாட்ஸப்பில் ராவிக் கொண்டும், தோழன் நாசோவிடம் பேஸ்புக்கில் சாட் பண்ணிக்கொண்டும் இருந்தாள்.

(நாசோ/ஸ்ருதி: இந்த தோழி பேரு வாசகர் வட்டத்தில் வரலியே, இவ இருக்கிறது இன்னொரு வட்டமா? ஆமா, அது உள்-உள் வாசகிகள் வட்டம், கடலை போடுறதுக்கு மட்டும், சாட் பன்றதுக்கு இல்ல.) 

இதை எல்லாம் தெரிஞ்சுக்காத பழனிச்சாமி எப்படியும் கரெக்ட் பண்ணிடலாம்னு விஜயமங்கலம் தறிக்குப் போறதை விட்டுட்டு கோபிக்கு போற பஸ் ஏறிப் போக ஆரம்பித்தான். சாட்டிங், டேட்டிங் என எல்லாவற்றையும் அறிந்த அவன் வீட்டு நாய் முரளி, அவன் எப்போ கல்லை வச்சிக் கொட்டுவான் நாம எப்போ தூக்கிட்டு ஓடலாம் எனத் தேவுடு காக்க ஆரம்பித்தது.

இப்படியாக கந்தரகோலம் கதைகள் இனிதாக ஆரம்பித்தது...

No comments:

Post a Comment